::Loyola College::::


கல்வி - செயற்பாடுகள் (2014-15)


புத்தொளிப்பயிற்சி (Orientation for First years)


இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு (2014-15) சேர்ந்துள்ள மாணவர்களுக்கான மூன்று நாட்கள் புத்தொளிப்பயிற்சியைத் தமிழ்த்துறை நடத்தியது, 30-06-2014 அன்று ’தன்னை அறிதல்’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கு தன்முனைப்புச் சிந்தனைகளை இலயோலா மானுட மேம்பாட்டுத்துறை (Human Excellence Dept. Loyola College) வழங்கியது. 01-07-2014 அன்று ’பிழையின்றி பேசுதல் எழுதுதல்’ தொடர்பான கருத்துகளையும் பயிற்சிகளையும் கவிக்கோ ஞானச்செல்வன் மாணவர்களுக்கு வழங்கினார், மேலும் முனைவர், பர்வீன் சுல்தானா மாணவர்கள் பேச்சாற்றலை வளர்த்திடும் நுட்பங்கள் குறித்து உரையாற்றினார்,

02-07-2014 அன்று தமிழக இலவச மென்பொருள் வழங்கும் அமைப்பின (Free Software Foundation of Tamilnadu) சார்பில் சிபி கனகராஜ் அடிப்படை கணினி வசதி வாயப்புகளையும் நேரடிப்பயிற்சிகளையும் ‘hands on Training’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கு வழங்கினார். மாணவர்களது மனக்குழப்பத்தை பயத்தை போக்கும் விதமாகவும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் தன்திறனைக் கண்டு தெளியும் விதமாகவும் மூன்றுநாட்கள் பயிற்சிகள் தமிழ் பயிலும் மாணவர்களின் பன்முகப் பரிமாணங்களை வெளிக்கொணரும் வகையில் அமைந்திருந்தன.


கருத்தரங்கம்


ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த்துறையின் சார்பில் மாணவர்களுக்குத் தமிழ் அறிவு புகட்டும் வகையில் கருத்தரங்கம் நடத்தும் மரபினைத் தமிழ்த்துறைப் பின்பற்றி வருகிறது, அவ்வகையில் இவ்வாண்டு 'பேராசிரியர் தனிநாயகம் அடிகளார்-100 நினைவுக்கருத்தரங்கம்' காலச்சுவடு இதழுடன் இணைந்து தமிழ்த்துறை நடத்தியது. இதில் தனிநாயகம் அடிகளார் குறித்து ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழ் அறிஞர்களின் பொழிவுகள் நிகழ்ந்தன. கல்லூரி அதிபர், செயலர், மற்றும் முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

21-01-2015 புதன்கிழமையன்று முதுமுனைவர் ச. இராசமாணிக்கனார்.சே,ச,. நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவும் தமிழ் பண்பாட்டு மன்றம் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நடைபெற்றன.

முனைவர் சவரியார் (மேனாள் பிரெஞ்சு மொழித்துறைப் பேராசிரியர். தூயவளனார் கல்லூரி, திருச்சி) அவர்கள் பாரதியின் பாடல்களை பிரெஞ்சு இலக்கியங்களுடன் ஒப்பிட்டுக் கருத்துரை வழங்கினார். பிரெஞ்சு மொழி மற்றம் இலக்கிய வரலாற்றை எடுத்துரைத்து 20ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர்களுக்கும் பாரதியின் பாடல்களுக்கும் இடையேயான பொருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார். முனைவர் ப.டேவிட்பிரபாகர் கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ”கணினியும் தமிழும்” எனும் தலைப்பில் அறக்கட்டளை பொழிவுரை வழங்கினார். கணினி வழி தமிழ் எட்டியுள்ள நிலையையும் மாணவர்கள் தமிழ் வழி உயர்வடையும் வழிமுறைகளை விளக்கி ஆய்வுரை வழங்கினார்.


13-02-2015 அன்று நடைபெற்ற கி.வா.ஜ. நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவில் ’கம்பராமாயணத்தில் மானுடம்’ என்னும் தலைப்பில் கு. அரசேந்திரன் அவர்கள் சொற்பொழிவு வழங்கினார். கம்பனின் பாடல்களை இசையோடு பாடி கூட்டத்தினரை மகிழ்வித்தார்.


திருமதி எஸ்தர் இராஜம்மாள் நினைவு அறக்கட்டளை நிகழ்வு 27-02-2014 அன்று நடைபெற்றது, 27-02-2015 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் அருள்தந்தை ஜெகத்கஸ்பர் கலந்துகொண்டு ”பண்பெனப்படுவது தமிழ்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

 ::Loyola College::::
Principal & Chairman
Rev. Dr. M. Arockiasamy Xavier, S.J.

Secretary and Correspondent & Web Master
Rev. Dr. S. Lazar S.J.
CONTACT
Assistant Webmaster
Rev. Fr. A. Louie Albert S.J.
Chief Editor
Dr. K. S. Antonysamy
Phone: +91 - 44 - 28178200
Fax: +91 - 44 - 28175566
E-mail: helpdesk@loyolacollege.edu

Designed & Maintained by WEPRO

©2017 Loyola College. All rights reserved.