::Loyola College::::


மன்றங்களின் செயற்பாடுகள் (2014-15)


1969 ஆண்டுமுதல் இயங்கிவரும் தமிழ்த்துறை பன்னோக்குத் திறனோடும் பன்முகப் பரிமாணங்களுடனும் தனது முத்திரையைப் பதித்து வருகிறது. மாணவர்களின் ஆளுமைத்திறன் அறிவாற்றல் தமிழுணர்வு, தமிழ் தமிழர் வரலாற்றுப் புரிதல்பெரும் வகையில் பல்வேறு அமைப்புகளை நிறுவி மாணவர் பங்கேற்புடன் சாதனைப் பலநிகழ்த்தி வருகிறது.


தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய மன்றம் பொதுத்தமிழ் பயிலும் மாணவர்களுக்கான இனிகோ தமிழ்ப்பேரவை பிற்பகல் கல்லூரியில் பொதுத்தமிழ் பயிலும் மாணவர்களுக்கான வீரமாமுனிவர் தமிழ்ப்பேரவை ஆகியவை மாணவர்களின் படைப்பாளுமை,தலைமைத்துவப்பயிற்சி பெற்றிடும் வகையில் சிறப்புடன் இயங்கி வருகின்றன.


இனிகோ தமிழ்ப்பேரவை


2014-15 ஆம் கல்வியாண்டில் இனிகோ தமிழ்ப்பேரவை தனது தொடக்கவிழாவினை டி.என். வள்ளிநாயகம் அவர்களைக் கொண்டு தொடக்கவிழாவை 01-08-2014 அன்று நடத்தியது. தலைமைவிருந்தினர் 'தமிழர் பண்பாடு' என்ற தலைப்பில் தமிழக பண்பாட்டு விழுமியங்களை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். கடந்த 16-12-2014 அன்று 'தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய்' என்னும் தலைப்பில் திரு. கங்கை மணிமாறன் சிறப்புற உரையாற்றினார். 26-02-2015 அன்று 'சமயங்களில் சமரசம்' என்னும் தலைப்பில் பல்வேறு சமயங்களில் உள்ள நற்கருத்துகள் குறித்து மாணவர்கள் உரைவழங்கினர்.


மேலும் பல்வேறு கட்டங்களில் கட்டுரை, பேச்சுப்போட்டிகளை நடத்தினர்.


தமிழிலக்கிய மன்றம்


இம்மன்றத்தின் தொடக்கவிழா கடந்த 05-08-2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் தென்மொழி இதழின் ஆசிரியர் துரை.மா. பூங்குன்றன் கலந்துகொண்டு தமிழர் மொழி, இனம் குறித்து உரை நிகழ்த்தினார்.


04-09-2014 நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் பிரெஞ்சு மொழி இலக்கியம் குறித்து திருமிகு ஆர். சகாதேவன் அவர்களால் உரைநிகழ்த்தப்பெற்றது. கடந்த 10-09-2014 அன்று அருள்முனைவர் வின்சென்ட்சேகர்,சே.ச., அவர்களால் 'சமரசப் பார்வையில் தமிழ்ச்சமயங்கள்' என்னும் தலைப்பில் உரைநிகழ்த்தப்பெற்றது.


வீரமாமுனிவர் தமிழ்ப்பேரவை


வீரமாமுனிவர் தமிழ்ப்பேரவை தமிழ்த்துறையின் சுழற்சி-2(ளுழஐகூ-ஐஐ)இல் செயல்பட்டு வருகிறது. இப்பேரவையானது பிற்பகலில் பயிலும் இளங்கலை பொதுத்தமிழ் பயிலும் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பேரவையின் பொறுப்பாசிரியராக இவ்வாண்டு பேராசிரியர் ம. ஜெயபிரகாஸ் இரத்தினதியாகு அவர்கள் நியமிக்கப்பட்டார். மாணவர் செயலராக செல்வன் த. தமிழரசன் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். இப்பேரவையின் தொடக்கவிழா 04-08-2014 அன்று நடைபெற்றது. இணைமுதல்வர் திரு. இராமமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் திருமிகு. ஜான் தன்ராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


22-01-2015 அன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்சியில் கவிஞர் கங்கை மணிமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார், 14-02-2015 அன்று கல்லூரி நாள் விழா பரிசுப்போட்டியாக அருள்தந்தை சி.கே.சுவாமி, சே.ச., நினைவுப் பேச்சுப்போட்டியானது நடைபெற்றது. முதல் மூன்று பரிசுக்குரிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு மாணவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக இப்பேரவையானது இவ்வாண்டு செயல்பட்டது.
__________

 

 ::Loyola College::::
Principal & Chairman
Rev. Dr. M. Arockiasamy Xavier, S.J.

Secretary and Correspondent & Web Master
Rev. Dr. S. Lazar S.J.
CONTACT
Assistant Webmaster
Rev. Fr. A. Louie Albert S.J.
Chief Editor
Dr. K. S. Antonysamy
Phone: +91 - 44 - 28178200
Fax: +91 - 44 - 28175566
E-mail: helpdesk@loyolacollege.edu

Designed & Maintained by WEPRO

©2017 Loyola College. All rights reserved.